sun tv channel start the north indian channels

அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட தூர்தர்ஷன் தொலைக்காட்சியை தாண்டி அதிக மக்கள் மனதில் பதிந்த தொலைக்காட்சி என்றால் அது கண்டிப்பாக சன் டிவி எனலாம்.

தற்போது பல புது தொலைக்காட்சி நிறுவனங்கள், சின்னத்திரை உலகில் கால் பதித்தாலும், கடந்த 25 வருடங்களை இன்று வரை இந்தியாவில் முதல் இடத்தை தக்க வைத்துள்ள பெருமை இந்த தொலைக்காட்சியையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 18 மொழிகளில் தன்னுடைய கிளை தொலைக்காட்சியை துவங்கியுள்ள, சன் டிவி நிறுவனம் தற்போது ஒரு படி மேலே போய், வட இந்தியாவிலும் கால் பதிக்கவுள்ளது. 

இத்தனை ஆண்டுகள் வடஇந்திய மொழிகளில் கால் பதிக்க சன் டிவி நிறுவனம் தயங்கிய நிலையில் தற்போது அதிரடி முடிவு எடுத்து, விரைவில் மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் சேனல் தொடங்க முயற்சி செய்து வருகின்றதாம்.

சன் டிவியின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.