சும்மா சுர்ருன்னு வருது’ என்று  தொடங்கும் இந்த பாடலை  சிவகார்த்திகேயன் எழுத, அமரன் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தில் வினய் ராய் ,பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S. பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. இப்பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, G.V.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர். "வாடா தம்பி" எனும் இந்த குத்து பாடலில் கிராமத்தான் கெட்டப்பில் சூர்யா மாஸாக ஆடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக இரண்டாவது பாடல் யுகபாரதி எழுத பிரதீப்குமார், வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் என 3 பாடகர்கள் பாடியுள்ளனர். ".உள்ளம் உருகுதையா" எனத் தொடங்கும் இந்த பாடலில் நடிகர் சூர்யா முருகன் வேடத்தில் வருமாறு பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இன்று மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆனது. ‘சும்மா சுர்ருன்னு வருது’ என்று தொடங்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அமரன் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். 

YouTube video player