பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிறகு தான், சுஜா என்கிற நடிகையும், பல படங்களில் நடித்துள்ளார் என மக்கள் தெரிந்து கொண்டனர். காரணம், ரசிகர்களால் பெரிதும் கண்டுகொள்ளப்படாத இவரை, வெளிச்சம் போட்டு கட்டிய பெருமை, பல பிரபலங்களை உருவாக்கி வரும் விஜய் டிவியையே சேரும்.

பெரிதாக மக்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரையும் எடுக்காமல், இவர் ஏறினார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு சில ரசிகர்களும் கிடைத்தனர். ஆனால் ஓவியா போல், நடந்து கொள்ள முயற்சித்தார் என்று பலரும் இவரை விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, இவருடைய நீண்ட நாள் காதலரான, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், சிவகுமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த மாதம், அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார், சுஜா வருணியின் கணவர். மேலும் தன்னுடைய சிம்பா பிறந்து விட்டதாகவும் கூறினார். இந்நிலையில் குட்டி சிம்பாவின் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தையின் பெயரையும் தெரிவித்துள்ளார் சுஜா.

இது குறித்து அவர் போட்டுள்ள ட்விட்டில்,  ''அனைவருக்கும் வணக்கம். எங்கள் குடும்பத்திற்கு இன்று மிகச் சிறந்த நாள். மிகவும் மகிழ்ச்சியாக இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். எங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழா.  எங்கள் குழந்தைக்கு எஸ்.கே. அத்வைத் என பெயர் சூட்டியுள்ளோம்'' என்று கூறியுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.