நடிகை சுஜா வருணி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னுடைய வளையகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  

நடிகை சுஜா வருணி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னுடைய வளையகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமான சுஜாவருணி, அதற்குப் பின் குணச்சித்திர வேடம் மற்றும் சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்த இவர், நடிகை ஓவியா போல் நடந்து கொள்கிறார் என விமர்சனங்கள் எழுந்தது. 

இதன்காரணமாக மக்களிடம் ஓட்டு குறைவாக பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது சுஜா கர்ப்பமாக உள்ளார். இந்த செய்தியை சில மாதங்களுக்கு முன் மிகவும் சந்தோஷமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ள சுஜா வருணிக்கு தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

View post on Instagram