விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் போட்டி போட்டு மோதி அவரவர் ஹீரோக்களை அசிங்கப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்களுக்கு கார்ட்டூன் மூலம் புத்தி புகட்டி உள்ளனர் அஜித் ரசிகர்கள். 

நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 27வது ஆண்டை இந்திய அளவில் வெறித்தனத்தோடு கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். 

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியை கொண்டாட #27YrsOfKwEmperorVIJAY என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.  இதில் உச்சபட்ச சாதனை என்னவென்றால் இதுவரை எந்த நடிகரின் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கும் இல்லாத வகையில் விஜய்க்காக அவரது ரசிகர்கள் 14 லட்சம் பேர் ஹேஸ்டாக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளனர்.

 

இதற்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் #மக்கள்தலைவன்அஜித்  #Viswasam ஆகிய ஆகிய ஹேஷ்டேக்குகளை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் 27- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தளபதி விஜய்க்கு தல ரசிகர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் என அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் ரசிகர் ஒருவர், நன்றி நண்பா எனக்குறிப்பிட்டு விஜயும் அஜித்தும் நட்போடு பேசிக்கொள்ளும் வகையில் ஒரு கார்ட்டூனை வரைந்து சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.