subramaniya swamy scolding rajinikanth and kamal

பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி யான சுப்ரமணிய சுவாமி அவ்வப்போது, நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினியின் அரசியல் வருகை பற்றி எதிர்மாறான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர் "அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் கமலஹாசன் பொருளாதாரத்தில் எ,பி,சி,டி கூட தெரியாதவர் என்றும்... பாட்டு பாடி ஆட்டம் போடும் இவர் எப்படி நாட்டை ஆள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய இவர், மோசடி ரஜினிகாந்த் ஒரு போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என கூறியுள்ளார்.

சுப்ரமணிய சுவாமியின் இந்த கருத்திற்கு ரஜினி மாற்று கமல் ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.