தமிழ்,தெலுங்கு, இந்தி உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் ‘ஸ்டன்’ சிவா ’வேட்டையன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் நாயகியாக நேகா நடிக்கவிருக்கிறார்.

அதற்கு முன்னரே சில படங்களில் ஸ்டண்ட் இயக்குநராகப் பணியாற்றியிருந்தாலும் பாலாவின் ‘நந்தா’ படத்தின் மூலம் பெரும்புகழ்பெற்று இந்தித்திரையுலகம் வரை நம்பர் ஒன் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துவருகிறார் ஸ்டன் சிவா.

தற்போது கதாநாயகன் ஆசை இவரையும் விட்டுவைக்கவில்லை. ஏற்கனவே கமலின் ‘வேட்டையாடு விளையாடு’  ‘கோலிசோடா2’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ஸ்டன் சிவா முதன்முதலாக டூயட் பாடவிருக்கிறார்.

‘பிரியமுடன்’, ‘இரணியன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’, ‘மதுரை வீரன்’, ‘பெருமாள்’, ‘துள்ளி விளையாடு’, ‘இங்க என்ன சொல்லுது’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வின்சென்ட் செல்வாதான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கப் போகிறார்.

 விஜயை வைத்து வின்செண்ட் செல்வா இயக்கிய ‘பிரியமுடன்’ தவிர்த்து ஒரு படமும் உருப்படியாக ஓடாத நிலையில் ஏற்கடனே அரைடஜனுக்கும் மேல் ஃப்ளாப் கொடுத்திருக்கும் வின்செண்ட் செல்வா, ஸ்டன் சிவாவையாவது கரை சேர்ப்பாரா என்பதை ‘வேட்டையன்’ தியேட்டருக்கு வரும்வரை பொறுத்திருந்து பார்த்துதான் சொல்லவேண்டும்.