இதுவரை ஸ்டன்ட் மாஸ்டர்களாக இருந்த இரட்டையர்கள் அன்பறிவ் தான் துர்கா படத்தின் டைரக்டர்களாக அவதாரம் எடுக்க உள்ளனர்.
இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என திரையுலகில் பன்முக கலைஞராக வலம் வரும் ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று, இவர் முதல் முறையாக சகோதரருடன் இணைந்து நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள் நடிப்பது, சமூக சேவை என படு பிசியாக இருக்கும் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படமான துர்கா படத்தின் டைரக்டர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே துர்கா படத்தின் டைட்டிலுடன் லாரன்ஸ் வயதான தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவலை ராகவா லாரன்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை ஸ்டன்ட் மாஸ்டர்களாக இருந்த இரட்டையர்கள் அன்பறிவ் தான் இந்த படத்தின் டைரக்டர்களாக அவதாரம் எடுக்க உள்ளனர் என அறிவித்துள்ளார். இந்த படத்தை லாரன்ஸே தயாரிக்கிறார்.
