வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி, நடைபெற இருக்கும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 26 தேதி, சனி கிழமையன்று, தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் 50 வது ஆண்டு பொன் விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

அன்றய தினம், படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்யக்கூறி ஸ்டண்ட்  யூனியனை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம், ஆகஸ்ட் 26 தேதி நடைபெற இருக்கும் அனைத்து படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.