பிரபல நடிகை ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தொல்லைக் கொடுத்தும்  மிரட்டியும் ஆபாச செய்திகள் அனுப்பியும் டார்ச்சர் செய்து  வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பிரபல வங்காள நடிகை அருணிமா கோஷ். பல படங்களில் நடித்துள்ள இவர், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது சமூக வலைத்தள பக்கத்தில், ஒருவர் மே 30 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து, ஆபாசமாகவும் சர்ச்சைக்குரிய விஷயங் களையும் பதிவிட்டு வந்துள்ளார். பின்னர்  அவரை பல்வேறு வழிகளில் மிரட்டியும் உள்ளார். இதையடுத்து போலீசில் புகார் செய்தார் அருணிமா. அருணிமா கோஷின் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார், தெற்கு கொல்கத்தாவில் உள்ள கர்பா பகுதியை சேர்ந்த முகேஷ் ஷா என்ற இளைஞரை கைது செய்தனர்.இவர், முகேஷ் மயுக் என்ற ஃபேக் ஐடியில் இருந்து நடிகைக்குச் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.

இதுபற்றி நடிகை அருணிமா கோஷ் கூறும்போது, ...ஆரம்பத்தில் இதுபோன்ற கமென்ட்டுகளை கண்டுகொள்ளாமல்தான் இருந்தேன். ஆனால், எனது ஒவ்வொரு அசைவையும் கவனித்து, என்ன செய்கிறேன் என்பதையும் எங்கு செல்கிறேன் என்பதையும் கண்காணித்து  நான் ஸ்டாப்பாக கமெண்டுகள் எழுதிக் கொண்டிருந்தான். அடுத்த சில தினங்களில் மிரட்டவும் செய்ததால் போலீசில் புகார் செய்தேன்என்றார். முகேஷ் ஷா மனநிலை பாதிக்கப்பட்டு இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கினாரா அல்லது அவருக்கு வேறு ஏதாவது உள்நோக்கம் இருந்ததா என்ற கோணங்களில் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.