HipHop Aadhi : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ஹிப்ஹாப் ஆதி. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி. பின்னர் ஏராளமான படங்களுக்கு இசையமைத்த இவர், மீசைய முறுக்கு படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
இதையடுத்து சிவகுமாரின் சபதம் படத்தை இயக்கி நடித்த ஆதி, அன்பறிவு, நான் சிரித்தால், நட்பே துணை ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் ஆதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வசித்து வருகிறார்.

அந்த வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடிகர் ஹிப் ஹாப் ஆதியின் வீட்டு கதவு சேதமடைந்துள்ளது. இதையடுத்து காரில் தப்பியோடிய மர்ம நபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் கண்டுபிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் ஆக்டிங் டிரைவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் எதேனும் சூழ்ச்சி இருக்கிறதா என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Avatar 2 Release date : 160 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் அவதார் 2.... ரிலீஸ் தேதியுடன் வந்த மாஸ் அப்டேட்
