தர்பார் திரைப்படத்தில் ஆயுள் தண்டனை கைதி ஒருவரை சிறைக்கு வெளியே அனுப்பிவிட்டு அவனுக்கு பதிலாக வேறு ஒருவனை சிறையில் வைத்திருப்பார்கள். இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தின் போது சவுத்துல கூட பெண்மணி சிறையில் இருந்து வெளியே போய்ட்டு வர்றதாக கேள்விப்பட்டேன் என ஒரு அதிகாரி கூறுவார். இதே போல காசு மட்டும் இருந்தால் போதும் சிறையில் ஷாப்பிங்கே போகலாம் என டயலாக் இருக்கும். இந்த இரண்டு டயலாக்குமே சசிகலாவை குறி வைத்து எழுதப்பட்டவை என்கிற விஷயம் யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் சசிகலா ஷாப்பிங் சென்றுவிட்டு சிறைக்கு திரும்புவது போன்ற சிசிடிவி வெளியானது. இதே போல் சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் இருப்பதாக கர்நாடக சிறைத்துறை ஐஜி ரூபா கூறியிருந்தார். இந்த பின்னணியில் தர்பார் படத்தில் இடம்பெற்று இருந்த வசனம் தற்போது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி சசிகலாவை சீண்டி வசனம் எழுதியது முருகதாஸ் தானாம். ரஜினியிடம் அது குறித்து பேச அவரும் ஓகே சொல்லியுள்ளார். ஆனால் இந்த வசனத்தை முருகதாஸ் எழுதியதன் பின்னணியில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டு துப்பாக்கி திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென முஸ்லீம் அமைப்புகள் அந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தின. காரணம் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முருகதாஸ் படம் எடுத்துள்ளார் என்று கூறினார்கள். எத்தனையோ படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த நிலையில் 2012ம் ஆண்டு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் அமைப்புகள் துப்பாக்கிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதன் பின்னணியில் ஜெயா டிவி இருந்தது. துப்பாக்கி படத்தை அடிமாடு விலைக்கு ஜெயா டிவி கேட்டது. ஆனால் அப்போது லைக்கா நிறுவனம் கொடுக்க மறுத்தது. இதனால் தான் படத்திற்கு எதிராக அப்போது ஆளும்கட்சி எனும் செல்வாக்குடன் துப்பாக்கிக்கு எதிராக முஸ்லீம்கள் தூண்டிவிடப்பட்டனர்.

இது குறித்து சமரசம் பேச சசிகலா தரப்பை முருகாஸ் தரப்பு தொடர்பு கொண்ட போது சரியான பதில் கிடைக்கவில்லையாம். இதே போல் கத்தி படத்தின் கதை திருட்டு கதை என்று கூறப்பட்டதன் பின்னணியிலும் ஆளும்கட்சி தரப்பிற்கு தொடரபு இருந்தது. அதனை சரி செய்வதாக கூறித்தான் கத்தி படத்தை ஜெயா டிவி கையகப்படுத்தியது. இந்த பழைய கால தொந்தரவுகளை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு தான் சசிகலாவை நேரடியாக அட்டாக் செய்துள்ளாராம் முருகதாஸ்.