நடிகை ஸ்ரீரெட்டி திரையில் தோன்றுபவர்கள் எல்லாம் ஹீரோக்கள் இல்லை.  முதலமைச்சர் சந்திரசேகரராவ் தான் ரியல் ஹீரோ என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி சமூகவலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்கள் மீது, பாரபட்சம் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது ரெட்டியின் டைரி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பல பிரபலங்களின் உண்மை முகம் தெரிய வரும் என்று ஏற்கனவே இவர் கூறியுள்ளார். இதனால் யார் யார் தலை உருளும் என சில நடிகர்கள் சற்று அச்சத்தில் தான் உள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகைகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டும் என ராம்மோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழு ஒன்றை, தெலுங்கான அமைப்பு அமைந்துள்ளது.

இந்த குழுவில் நடிகை சுப்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான்சி, இயக்குனர் நந்தினி ரெட்டி, பேராசிரியை வசந்தி, மருத்துவர் ராம தேவி மற்றும் சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இது குறித்து அறிந்த ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைதளத்தில் தெலுங்கானா அரசுக்கு நன்றி என்றும், என்னுடைய கனவு இன்று நிஜமாகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும் திரையுலகில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை, ஆனால் முதல்வர் சந்திரசேகரராவ் ஒரு ரியல் ஹீரோ என இந்த அறிவிப்பின் மூலம் நிரூபித்து விட்டார்.  வேசி  என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டதாக உணர்கிறேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசிவித்துள்ளது என சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.  இவரின் இந்த ட்விட்டிற்கு பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.