தெலுங்கில் அறிமுகமாகி, சர்ச்சை நடிகை என அனைவராலும் அறியப்பட்டவர் ஸ்ரீ ரெட்டி. சினிமாவில் வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்ததாக தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பின் தெலுங்கு பிலிம் சாம்பர் முன் நிர்வாண போராட்டத்திலும் குதித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. 

தெலுங்கு திரை உலக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரது  சுயரூபமும் இவர் வழியாக வெளியே வந்தது. மேலும் இவருடைய சர்ச்சையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, என பலர் தமிழ் பிரபலங்கள் பெயரும் அடிப்பட்டது. 

ஆரம்பத்தில் இருந்ததே, இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது.  என கூறி வரும் ஸ்ரீ ரெட்டி, இது வரை அவற்றை வெளியிட வில்லை. மேலும் தன்னை ஏமாற்றியதாக கூறி குற்றம் சாட்டிய ராகவா லாரன்ஸ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

சமீப காலமாக எந்த பிரபலங்களின் பெயரையும்,  வெளியிடாமல் இருந்து வந்த ஸ்ரீ ரெட்டி, தற்போது பிரபல இயக்குனர் கொரட்டல சிவா பெயரை வெளியிட்டு உலகிலேயே மிக மோசமானவர் இவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் தமிழில் நடித்து வரும் 'ஸ்ரீ ரெட்டியின் டைரி' வாழ்க்கை வரலாறு படத்திலும் இவருக்கு பெரும் பங்கு இருப்பதாக கூறி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இயக்குனர் கொரட்டல சிவா தெலுங்கு முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்.  நடிகர் பிரபாஸ், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் என முன்னணி நடிகர்களை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் மீது தீடீர் என ஸ்ரீ ரெட்டி இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.