பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சமயங்களில் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட மற்றவர்களுக்கு பெரிய அளவில் வலியை உண்டாக்கும்.

அது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போலீஸ் - திருடன் டாஸ்கில் சென்ராயன் சாப்பிட வரும் போது, ஷாரிக் அவரை சாப்பிட விடாமல் தடுத்தார். இதனால் மிகவும் கோபமாகி சென்ராயன் அவரை திட்டினார். பின் ஷாரிக் மன்னிப்பு கேட்டும் அதனை சென்ராயன் ஏற்காமல் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். 

இப்படி சக போட்டியாளர் ஒருவருக்கு சாப்பாடு கொடுக்காமல் இருந்தது பற்றி நடிகை ஸ்ரீப்ரியா அவருடைய ட்விட்டர் பகுதியில் விமர்சித்து கோபமாக பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது "நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்... இருப்பதை பகிர்ந்து உண்டு பழகியவள்... கனவில்கூட யாருக்கும் அப்படி செய்யமாட்டேன், செய்பவரை மன்னிக்கவும் மாட்டேன்" என கூறியுள்ளார்.