இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்த பிரசாந்தி என்பவரையும், அவரது தாயாரையும் காணவில்லை என்றும், அவர்களை கியூ பிரிவு போலீசார் மிரட்டியதோடு, சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என கூறி, ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

புகழேந்தி தங்கராஜின், மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டு விசாரித்த நீதி மன்றம்,  பிரசாந்தியும் அவரது தாயாரும் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்தது கண்டுபிடிக்கப்பட்டு,  குற்றவாளியாக உள்ளதாக தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை அவர்களிடம் நடத்த விசாரணைக்கு வர அழைத்தபோது, அவர் இங்கு இல்லை என்றும், பிரசாந்தி மற்றும் அவருடைய தாயார் இருவரும் கள்ளத்தோணியில் இலங்கைக்கு தப்பி சென்றனரா அல்லது பாஸ்போர்ட் பெற்று  முறைப்படி இலங்கை சென்றாரா என்று சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது. ஆகவே இது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் புகழேந்தி தங்கராஜ் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை  இன்னும் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், பதில் மனுவிற்காக புகழேந்தி தங்கராஜ் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

புகழேந்தி தங்கராஜ் ஏற்கனவே, 'காற்றுக்கென்ன வேலி' என்கிற படத்தை இயக்கியவர். இவர் இலங்கை அகதிகள் படம் கஷ்டங்களையம், துன்பங்களையும், மையமாக வைத்து இயக்கி இருந்த  திரைப்படம் 'கடல்குதிரைகள்'. சமீபத்தில் வெளியான இந்த படத்தில், தான் பிரசாந்தி கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.