srikanth explained the reason for divorce with dd
டிடி விவாகரத்திற்கு காரணம் இதுதான்..! கணவர் ஸ்ரீகாந்த் அதிரடி...!
எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதில் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் டிடி.
பிரபல தனியார் தொலைக்காட்சியில், சிறந்த தொகுப்பாளராக இருந்த டிடி, அவருடைய குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார்.
பின்னர் கருத்து வேற்பாடு காரணமாக விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார் டிடி.இதற்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் விமர்சித்து வந்த நிலையில்,தற்போது டிடி யின் கணவர்,அவருடைய நெருங்கிய நண்பரிடம் காரணத்தை தெரிவித்து உள்ளார்.
அதாவது, சமீபத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய சசுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டி, சினிமாக்களில் நடிப்பது உள்ளிட்ட பல காரணத்தை சொல்லி,நண்பர்களிடம் புலம்பி இருக்கிறார் ஸ்ரீகாந்த்.
திருமணத்திற்கு முன்பே டிடி எப்படி இருந்தார் என்பதை தெரிந்து தான், ஸ்ரீகாந்த் அவரை திருமணம் செய்துள்ளார்.
ஆனால்,திருமணத்திற்கு பின், அதே செயல்கள் கணவருக்கு பிடிக்காமல் போக, விவாகரத்து வரை சென்றுள்ளது இந்த விஷயம் .
தற்போது டிடி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சமூதாயத்தினருக்கு திருமணம் என்பது "ஜஸ்ட் லைக் தட்" போன்று தோன்றுகிறதோ....என்னவோ....
பிரமாண்டமாக திருமணம் நடந்து,எளிதில் பிரிந்து விடும் அவல நிலை தான் தற்போதைக்கு பெருகி வருகிறது.
