நடிகை ஸ்ரீதேவி காலமானதைத் தொடர்ந்து பலர் அவரைப்பற்றி மறக்க முடியாத தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மறைத்த பிரபல இயக்குனர் பரதனின் மனைவியும் நடிகையுமான கே.பி.ஏ.சி லலிதா, ஸ்ரீதேவி தாய் கொடுத்த வாக்கை காப்பாற்ற தன்னுடைய கணவர் இயக்கிய திரைப்படத்தில் நடித்தார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழுக்கு குட்பை:

தமிழில் 1986 ஆம் ஆண்டு கடைசியாக நடிகர் ரஜினிகாந்துடன் 'நான் அடிமை இல்லை' என்கிற படத்தில் நடித்து விட்டு தமிழ் மொழி படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேர பாலிவுட் நடிகையாக மாறியவர் ஸ்ரீதேவி. 

இவர் தமிழ் மொழிப் படங்களை விட்டு விலகுவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே மலையாளப் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 

தேடி வந்த வாய்புகள்:

ஸ்ரீதேவி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சமயத்தில் தமிழில் கூட தேடிவந்த வாய்ப்புகளை ஏற்காமல் சில இயக்குனர்கள் கோபத்திற்கும் ஆளானார். 

ஆனால் 1996 ஆம் ஆண்டு மலையாளத்தில் 'தேவராகம்' என்கிற படத்தில் ஸ்ரீ தேவி நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

தாய் கொடுத்த வாக்கு:

இந்த படத்தில் ஸ்ரீதேவி நடிக்கக் காரணம் அவருடைய தாய் ராஜேஸ்வரி கொடுத்த வாக்குறுதி தான். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்தில் அவரை முதல் முதலாக விளம்பரப்படம் ஒன்றிற்காக புகைப்படம் எடுத்தவர் இயக்குனர் பரதன்.

இதனால் நன்றிக்கடன் தீர்க்கும் விதமாக ஸ்ரீதேவி தான் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதால், ஸ்ரீ தேவியின் அம்மாவும் பரதனுக்கு தன் மகள் கண்டிப்பாக இந்த படத்தை நடிதுக்கொடுப்பர் என உறுதி கொடுத்தாராம்.

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது அவருடைய அம்மாவின் மூளை அறுவை சிகிச்சையும் அமெரிக்காவில் நடந்ததாம். எனினும் சங்கடத்தைப் பொருட்படுத்தாமல் அவ்வப்போது அமெரிக்காவில் இருந்து வந்து படத்தை நடித்து கொடுத்தார் ஸ்ரீ தேவி என இயக்குனர் பரதனின் மனைவியும் மலையாள நடிகையுமான கே.பி.ஏ.சி. லலிதா அவருடைய மனதில் பதித்துள்ள நிலைவுகளை பகிர்ந்துள்ளார்.