நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24 ஆம் தேதி துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் நட்சத்திர ஓட்டலில் உள்ள பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்தார். இவருடைய மரணம் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இவருடைய மரணத்தைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது. 

தற்போது ஸ்ரீதேவியின் உறவினர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்... ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரால் வேதனையில் வாழ்ந்து வேதனையுடனே இறந்துவிட்டதாக மனம் வருந்திக் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரிக்கு, ஸ்ரீதேவி போனி கபூரை காதலித்த நாள் முதலே பிடிக்காது. ஆனால் இந்த எதிர்ப்புகளை மீறி காதலித்த அவரையே திருமணமும் செய்துக்கொண்டார். சில சமயங்களில் ராஜேஸ்வரி போனி கபூரை நேரடியாக கூட அசிங்கப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் வேணுகோபால்.

நஷ்டம்:

தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த சில பாலிவுட் படங்கள் தோல்வியடைந்ததால். போனி கபூருக்கு மிகபெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட ஸ்ரீதேவி தான் ஆசைப்பட்டு வாங்கிய பல சொத்துக்களை கூட விற்றுள்ளார். 

நடிப்பிற்கு திரும்பிய ஸ்ரீதேவி:

கணவரால் ஏற்ப்பட்ட கடனை அடைக்க சொத்துக்களை விற்ற நிலையில் தன்னுடைய இதயத்தில் வலியுடனும், வேதனையுடனும் நிம்மதி இல்லாமல் அல்லாடினர் ஸ்ரீதேவி. 

மேலும் பணப் பிரச்சனை காரணமாகத்தான் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார் என்றும் ஸ்ரீதேவியின் உறவினர் வேணுகோபால்தெரிவித்துள்ளார்.