நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது

திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் துபாய் சென்ற ஸ்ரீதேவிக்கு சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதில் மரணம் அடைந்தார்.

தன் நாத்தனார் வீட்டு திருமணத்தில்  கலந்துக்கொண்டு, அடல் பாடல் என  மிகவும் மகிழ்ச்சியாக  நேரத்தை  செலவிட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவியின் மறைவு  அனைவரையும்  கண்ணீரில் ஆழ்த்தியது.

இவர்  இறப்பிற்கு,சற்று முன் போனி கபூருடன் கட்டிப்பிடித்து  ஆடிய அந்த ஆட்டமே  ஸ்ரீதேவிக்கு கடைசியாக அமைந்தது.

துபாயில் உள்ள,அவரது உடல் இன்று பிற்பகல் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது.