sridevi husband twitter is hacked
சமீப காலமாக பல நடிகைகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதில்,போலித்தனமாக பல தகவல்களை பரப்பி வருகின்றனர் மர்ம மனிதர்கள்.
அதே போல் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பல அதிர்ச்சி கொடுக்கும் வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியாகி கோலிவுட் திரையுலகத்தையே பரபரப்பாகியது.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகை மடோனா செபாஸ்டியன் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் வெளியிடப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறினார்.
இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போனிகபூரின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர், லக்னோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றின் நன்கொடைக்காக தனது கணக்கில் பணம் டெபாசிட் செய்யுங்கள் என ஒருசில திரையுலக பிரபலங்களை கேட்டுக்கொண்டதால் ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தற்போது போனிகபுர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது சார்பில் சுனில் கோத்ரா என்பவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
