சினிமா துறையில் உச்சத்தை தொட்ட நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சம்பங்கிப் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட பிரமாண்ட வாகனத்தில் இவருடைய உடல் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

அந்தோரியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பார்லே பகுதி மயானத்தில் இவருடைய உடல் குடும்ப முறைப்படி எரியூட்டப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

பிரபலங்கள் பலர் இவருடைய உடல் கொண்டு செல்லும் வண்டியை தொடரும் நிலையில். ஸ்ரீதேவியின் முகத்தை பார்பதற்காக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சாலையின் இரு புறங்களிலும் குவிந்துள்ளனர்.

மேலும் மகராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் நடக்கும் நடிகை ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம். இன்னும் சில மணிநேரத்தில் மயானத்தை சென்றடையும் என்றும் இவருடைய உடல் 3:30 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.