பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவி  இறந்ததை அடுத்து அவருடைய உடல் இன்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பால் தான் இறந்துள்ளார் என்றும் சந்தேகங்களுக்கு இடமில்லை என்றும் தடவியல் மருத்துவர்கள் தங்களது அறிக்கையில்,தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஸ்ரீ தேவியின் உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் நீடித்த நிலையில்,  தற்போது தடயவியல் மருத்துவர்கள் அறிக்கை கொடுத்திருப்பதால் இன்று இரவுக்குள், மும்பைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

இந்நிலையில்,ஸ்ரீ தேவியின் நெருங்கிய திரைத்துறை நண்பர்களான ரஜினி கமல் மற்றும் மேலும் பல நட்சத்திரங்கள் இறுதி சடங்கில் பங்கேற்பார்கள் என தெரிய வந்துள்ளது.

இதன் இடையே,ரசிகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில், இறுதி சடங்கிற்காக காத்திருக்கிறார்கள்.