அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. 

கடந்த ஆண்டு, 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது 'பார்ட்டி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் வெங்கட்பிரபு  நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும், அந்த படத்தின் கதையை எழுத துவங்கி விட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக, மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும். இந்த படத்தின் மூலம் ஜான்வி தமிழில் அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியானது. 

தற்போது இந்த தகவல் குறித்து விளக்கம் கொடுத்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு, இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார். மேலும் தான் 'பார்ட்டி' படத்தில் பிஸியாக இருந்து வருவதாகவும். இன்னும் சிம்புவிற்கு எழுதப்பட்டு வரும் கதை முடிக்கப் பட வில்லை ஆகவே, கதை முடித்த பின்பே கதாநாயகி தேர்வு நடைபெரும் என தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்துள்ள முதல் இந்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.