சினிமா உலகில் பேரழகி என்ற பெயர் பெற்ற நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு ஒட்டு மொத்த ரசிகர்களையும், திரைப்பிரபலங்களையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

போனி கபூரின் சகோதரி வீட்டு திருமண விழாவில் கலந்துக்கொள்ள ஸ்ரீ தேவி துபாய் சென்ற போது இந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில் போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூர் இறந்த அதே நிலையில் தான் ஸ்ரீ தேவியும் இறந்துள்ளார் என பாலிவுட் திரையுலகில் சோகமான செய்தி ஒன்று உலாவருகிறது.

போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூர் அவருடைய மகன் அர்ஜுன் கபூர் நடித்த முதல் திரைப்படம் வெளியாக ஒரு சில மாதங்கள் இருந்த நிலையில் தான் உயிர் இழந்தார். 

அதே போல் தற்போது நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் தன்னுடைய முதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் அந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஸ்ரீ தேவி இறந்துள்ளார். எதர்ச்சியாக இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் ஒரே மாதிரியான நிலையில் போனி கபூர் தன்னுடைய இரண்டு மனைவிகளையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.