ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில், தெலுங்கு பிரபலங்கள் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டியின் பார்வை தற்போது தமிழ் திரையுலகின் மீது திரும்பி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் தனக்கு எதிராகவோ அல்லது வேறு பெண்களுக்கு எதிராகவோ யாராவது பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். 

ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவார்கள் என்று நம்பி அவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், ஏர்.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அடுத்து யார் பெயரை வெளியிடுவாரோ என்ற பயத்தில் திரைவுலகினர் உள்ளனர். தற்போது சென்னை வந்துள்ள அவர் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் அளித்து வருகிறார். தெரிந்தே படுக்கைக்கு சென்றுவிட்டு தற்போது வந்து புகார் தெரிவிப்பது சரியில்லை என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர். 

இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தனது முகநூல் பக்கத்தில் நான் நடிகர் சங்கத்துடன் பேசி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உள்ளேன். பெண்கள் பிரச்சனை பற்றி தான் பேச உள்ளேன். இதுதொடர்பாக நாசரிடம் பேசியுள்ளன். பிரஸ் மீட் அல்லது மீடியா மூலம் எனக்கு எதிராகவோ, வேறு எந்த பெண்களுக்கு எதிராகவோ பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நான் அளித்த புகார்கள் குறித்த எந்தவித விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.