ஸ்ரீ ரெட்டியிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபலம்..! 

சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக விரல் விட்டு சொல்லும் அளவிற்கே நடிகர் நடிகை இருந்தாலும் ,ஆண்ட்ரியா ஸ்ரீ ரெட்டிக்கு கொஞ்சம் ஆதரவாக பேசினார்

இதற்கு இடையில், ஸ்ரீ ரெட்டி பற்றி ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டதற்கு எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. படுக்கைக்கு அழைத்தால் செல்வதும், செல்லாததும் நம் கையில் உள்ளது. திறமை தான் முக்கியம் என்றார்.

இவருடைய இந்த பதிலுக்கு, பதிலடி கொடுத்து உள்ள ஸ்ரீ ரெட்டி, ஆண்ட்ரியா தனக்கு ஆதரவாக பேசியதை பார்த்து உச்சி குளிர்ந்து இருந்ததால், சக நடிகைகள் பற்றி எப்படி பேச வேண்டும் என்று தமிழ் நடிகை ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் சிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் இது தேவையா அவருக்கு என கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, ஸ்ரீ ரெட்டி பற்றி கேட்டாலே எந்த நடிகையும் வாய் திறக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.