Sri Reddy next man in her Leaks list the famous director
தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த தெலுங்கு திரையுலக பிரபலங்களை ஸ்ரீ லீக்ஸ் மூலம் அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது இயக்குநர் கொரடலா சிவா தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரைப் படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்கும் நடிகைகளை பிரபலங்கள் படுக்கைக்கு அழைக்கும் அவலத்தை நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இயக்குநர் சேகர் கமுல்லா, நடிகர் ராணாவின் தம்பி ஆகியோரைத் தொடர்ந்து திரைக்கதாசிரியர் கோனா வெங்கட் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தார்/

பிரபல திரைக்கதாசிரியரும், இயக்குநருமான கோனா வெங்கட் தன்னிடம் அசடு வழிந்த வாட்ஸ்-அப் உரையாடலை பகிர்ந்து ஸ்ரீ ரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான பிரபாஸ், மகேஸ் பாபு, ஜூனியர் என்டிஆர் போன்றோரை வைத்து படம் எடுத்த இயக்குநர் கொரடலா சிவா மீது . ஸ்ரீ ரெட்டி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் தெலுங்கு பட வாய்ப்புக்காக கொரடலா சிவாவை, ஸ்ரீ ரெட்டி அணுகியபோது, அவர் தன்னை செல்லமாக பேபி என்று அழைத்தாகவும், பல மணி நேரம் இனிக்க, இனிக்க பேசிய அவர் இறுதியில் தன்னை படுக்கைக்கு அழைத்தாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாட்ஸ்அப்பில் கொரடலா சிவாவுடன் சாட் செய்த பதிவையும் ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகமே தற்போது ஆடிப்போயுள்ளது. தொடர்ந்து தனது ஸ்ரீ லீக்ஸ் மூலம் பல தொடர்புகள் அம்பலத்துக்கு வருவதால் அவரை சமாதானம் செய்து வைக்க பலர் முயற்சி செய்து வருவதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.
