தெலுங்கு திரையுலக பிரபலங்கள், ஒவ்வொருவர் பெயராக வெளியிட்டு அதிர வைத்து வருகிறார் ஸ்ரீலீக்ஸ் நடிகை. இது வரை இரண்டு இயக்குனர், ஒரு பிரபலத்தின் வாரிசு மற்றும் எழுத்தாளர் ஒருவரது பெயரை வெளியிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கியதை வன்மையாக கண்டித்து, பிலிம் சேம்பர் முன் தன்னுடைய ஆடைகளை கழற்றி விட்டு அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.                        

இப்படி இவர் நடந்துக்கொண்டதால், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் இவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது. இது குறித்து கூறிய ஸ்ரீரெட்டி சில பிரபலங்கள் தங்களுடைய பெயர்களை வெளியிட வேண்டாம் என தனக்கு படம் கொடுக்க முன் வந்ததாகவும் தெரிவித்தார். அதே போல் தெலுங்கு திரையுலகையே ஆட்டி படைப்பது நான்கு குடும்பங்கள் என்ற தகவலையும் வெளியிட்டார். 

இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் அம்மா பரபரப்பான பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது, "என் மகள் வித்தியாசமானவர், இதுவரை அவருக்கு நேர்ந்த எந்த விஷயத்தையும் என்னிடம் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய உதவி தேவைப்பட்டு அவர் கேட்டால் நான் உதவ தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார், இதை கேட்டதும் ஸ்ரீரெட்டி கதறி கதறி அழுதுள்ளார்.