தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள் பற்றி பல பாலியல் குற்றங்களை முன் வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது பட வாய்ப்பை பெற்றே தீர வேண்டும் என்கிற முடிவில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக, ஆடல், பாடல், டப்மேட்ச் என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்து வரும் 'கிகி சேலஞ்ச்' நடனத்தை ஆடி அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'கிகி சேலஞ்ச் விளையாட்டு பல விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கிறது எனவே வீடியோக்கள் வெளியிட வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ள நிலையில் ஸ்ரீரெட்டி அதையும் மீறி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் இவர் மிகவும் ஆபாசமாக, அரை குறை ஆடையுடன், பார்ப்பவர்கள் முகம் சுலிக்கும் அளவிற்கு நடன அசைவுகள் இடம்பெற்றுள்ளதால், இந்த வீடியோ ஆபாச வீடியோவுக்கு இணையாக உள்ளது என நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.