நடிகை ஸ்ரீதேவி குடும்ப நண்பர் திருமணத்திற்காக துபாய் சென்ற போது மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மரணமடைந்ததாக தகவல் வெளியானது.

தற்போது இதுகுறித்து குடும்பத்தினர் கூறுகையில்....

ஸ்ரீ தேவி தன்னுடைய கணவரின் சகோதரியின் குடும்ப திருமணத்திற்காக கணவர் போனி கபூர் மற்றும், மகள் குஷியுடன் கலந்துக்கொண்டார். திருமணம் மூன்று நாட்களுக்கு முன்பே நடந்து முடிந்து விட்டது. எனினும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி சுற்றி பார்க்க திட்டம்மிட்டிருந்தனர் .

இந்நிலையில் ஸ்ரீ தேவி நேற்று இரவு, பாத்ரூமில் திடீர் என மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக கணவர் போனி கபூர் மற்றும் ஸ்ரீ தேவியின் மகள் குஷி இருவரும் அவரை அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். 

ஆனால் மருத்துவர்கள் ஸ்ரீ தேவி மயங்கி விழுந்த நொடியிலேயே  மாரடைப்புக் காரணமாக மரணமடைந்ததாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து துபாயில் மரணமடைந்த ஸ்ரீ தேவியின் உடலை இந்தியா கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பொதுவாக டூரிஸ்ட் விசாவில் வெளிநாட்டிற்கு வந்து மரணமடைந்தால் அவருடைய உடலை இந்தியா கொண்டு செல்ல ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளது. 

தற்போது இதற்கான முயற்சிகளை ஸ்ரீ தேவியின் குடும்பத்தினர் அனைவரும் செய்து வருகின்றனர். எப்படியும் இன்று  சிறப்பு விமானம் மூலம் இவரது உடல் இந்தியா கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளனர்.