நடிகை ஸ்ரீ தேவி கர்பமாக இருந்த போது,போனி கபூரின் தாய் ஸ்ரீ தேவியின் வயிற்றில் ஓங்கி குத்தியதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீ தேவி  இறப்பை ஏற்றுகொள்ள முடியாமல் மிகுந்த வருத்தத்தில் உள்ள ராம் கோபால் வர்மா, கடவுளை  திட்டி  ட்வீட் செய்துள்ளார்.

ஸ்ரீ தேவியின் முதல் கர்ப்பம்

போனி கபூர் மோனாவின் கணவராக இருந்தபோது, ஸ்ரீ தேவியை காதலித்து திருமணம் செய்துகொள்ள, தனது மனைவியையும் 2 குழந்தைகளையும் பிரிந்தார்.

அதன்பின், ஸ்ரீ தேவியை மணம் முடிந்து அவர் கர்ப்பமாக  இருந்தபோது,கபூரின் தாயார் அவரது வயிற்றில் ஓங்கி  அடித்தார் என,ராம் கோபால் வர்மா சமூக வலைதளங்களில் தெரிவித்து உள்ளார்

எப்பொழுதும் கவலையாகவே வாழ்ந்த  ஸ்ரீ தேவி

ஸ்ரீ தேவி அவரது வாழ்கையில்,எப்போதுமே கவலையாக வாழ்ந்தார்..அந்த தகவலை அவரது முகத்தில் நன்றாகவே தெரியும்...இதனை யாரும் தெரிந்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே அவர் யாருடனும் நெருங்கி  பழகி வருவதை  தவிர்த்து  வந்தார் என்று  தெரிவித்துள்ளார் வர்மா

மேலும் போனி கபூரை திருமணம் செய்த பின்னர்,அவரை  யார் பார்க்க  சென்றாலும் ஓரி விதமான  சோகத்தை உணர முடிந்ததாக பலரும் தெரிவித்து உள்ளனர் என்றும்  ராம் கோபால் வர்மாதெரிவித்து உள்ளார்.