Spider movie will be released only in Tamil theaters
மகேஷ்பாபு நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஸ்பைடர்.
இந்தப் படத்தை ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.
அதற்கு காராணம், மகேஷ்பாபு முதன்முறையாக தமிழில் அறிமுகமாகும் படம் என்பதை தாண்டி நீண்ட இடைவேளைக்குப் பிறகு முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
இப்படத்தை தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தான் வெளியிட உள்ளது.
டீசர், சிங்கிள் டிராக், பாடல்கள் என தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே,சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாம் படக்குழு.
