அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் 'கோலமாவு கோகிலா'. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

நயன்தாராவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்திருந்த 'கல்யாண வயசு' பாடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், நாளை வெளியாக உள்ள இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
 
மேலும் இதுவரை, ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும் நிலையில் தற்போது, முதல் முறையாக நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கோகோ' படத்திற்கும் காசி, குமரன் உள்ளிட்ட திரையரங்குகளில் நாளை காலை எட்டு மணிக்கு சிறப்பு காட்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இதுவரை எந்த நடிகைக்கும் கிடைக்காத கௌரம் இவருக்கு கிடைத்துள்ளதால் நயன்தாரா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.