சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.  ‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. 2016ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில், சந்தானம் ஹீரோவாக  நடித்திருந்தார். அஞ்சால் சிங், கருணாஸ், ஆனந்த்ராஜ், செளரப் சுக்லா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். எஸ்.தமன் மற்றும் கார்த்திக் ராஜா  இருவரும் இசையமைத்தனர்.

சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. சந்தானம் ஜோடியாக தீப்தி ஷெட்டி நடிக்கிறார். தீபக் குமார்பதி ஒளிப்பதிவு  செய்ய, ஷபிர் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

“ஸ்ரீதேவியின் சொத்து ஏலத்திற்கு வந்ததாம்”

நடிகை ஶ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் சினிமா திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஶ்ரீதேவியின் உடல் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. சினிமா திரையுலகில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ள ஶ்ரீதேவியின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவி தான் வரைந்த ஒரு ஓவியத்தை கொடுத்துள்ளார். அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. 10 லட்ச ரூபாய்க்கும் மேல் அது விலைபோகலாம் என கூறப்படுகிறது. அந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தவமிருக்கு திரிஷாவுக்கு கிட்டுமா அந்த வாய்ப்பு?

த்ரிஷா நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் அவர் சீனியர், இளம் நடிகர்களுடன் நடித்து விட்டார். விஜய், அஜித், கமல்ஹாஸனுடன் நடித்த த்ரிஷாவுக்கு ஒரேயொரு குறை தான். அது ரஜினியுடன் நடிக்காதது. ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட முடியாதா என த்ரிஷாவின் நீண்ட கால ஆசை. 

ரஜினி சாருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க விரும்புகிறேன் என்று த்ரிஷா பெட்டி கொடுக்கிறார். ஆனால் அவரின் ஆசை இதுவரை நிறைவேறவில்லை. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்திலாவது த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. த்ரிஷாவின் ஆசையை கார்த்தி சுப்புராஜ் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.