பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம், பிரச்சனைகளை விட கமலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தது. பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனுக்கு என ஸ்பெஷல் கேக் ஒன்றையும் தயார் செய்து அனுப்பி வைத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் கமல் அவர்களுடைய அன்பை ஏற்று கொண்டு, அவர்களுக்கே மீண்டும் அந்த கேக்கை அனுப்பினார். மேலும் பிரியாணியை ஆசையாய் கேட்ட போட்டியாளர்களுக்கு, கண்டிப்பாக அதுவும் இருக்கிறது என தெரிவித்தது மட்டும் இன்றி, நேற்றைய தினம் யாரையும் சேவ் பண்ணாமல் நாளைத்தான் அணைத்து முடிவுகளையும் அறிவிக்க உள்ளதாக கூறினார்.

இந்நிலையில் சமீபத்தில் உயிரிழந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி பற்றியும், அவர் தனக்கு விட்டு சென்ற வாழ்நாள் பரிசு குறித்தும் பேசி பிக்பாஸ் மேடையில் கமல் கண் கலங்கியதை பார்க்கமுடிந்தது.

கமலின் நண்பர் ஏற்பாடு செய்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தெரிவித்து, எஸ்.பி.பி அவருக்கு ஆடியோ மூலம் தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்து சில வருடங்களுக்கு முன் அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ , பிக்பாஸ் செட்டில் ஒளிபரப்பு செய்த போது, கமல் தன்னை அறியாமல் கண் கலங்கினார். போட்டியாளர்களும் சோகத்தில் மூழ்கினர். இது தனக்கு எஸ்.பி.பி தனக்கு விட்டு சென்ற வாழ்நாள் பரிசு என பெருமிதத்தோடு கூறினார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.