பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான, எஸ்பி பாலசுப்பிரமணியம்  உடல்நலக் குறைவு காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் என நேற்று மாரடைப்பு காரணமாக நண்பகல் 1 :04 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் பாடும் நிலாவிற்கு, உலகெங்கிலும் உள்ள பல கோடி ரசிகர்கள் தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்தினர். குறிப்பாக, எஸ்.பி.பியின் உடலுக்கு நேரடியாக வந்து பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிலையில் எஸ்பிபி கடைசியாக கலந்து கொண்ட நேரடி ஆன்லைன்  இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய இந்த ஆன்லைன் நேரடி இசை நிகழ்ச்சியின் 100 ஆவது நாள் அன்று கலந்து கொண்ட எஸ்.பி.பி பாடல் பாடியது மட்டும் இன்று கொரோனவை பற்றி சில முத்தான வார்த்தைகளை பேசியுள்ளார்.

பலரும் இந்த கொடிய தொற்றான கொரோனாவை திட்டி வரும் நிலையில், கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம். அது நாம் செய்த பாவம் தான். நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள். ஆனால் நாம் இயற்கையை மாசு படுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு செல்கிறோம். நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்திவிட்டோம். அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்று சுற்றுச்சூழல் மாசு குறித்து எஸ்பிபி பேசியுள்ளார்.

மேலும் ’இனி வரும் காலத்தில் ஆன்லைன் மூலமே நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் பாடகர் ஒரு இடத்திலும், இசையமைப்பாளர் ஒரு இடத்திலும், இசை குழுவினர்கள் ஒரு இடத்திலும் இருந்துதான் பாடல்கள் பாடப்படும் நிலை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார்.

தனக்கு கடவுள் கொடுத்த அருள், நான் இதுவரை பாடி கொண்டிருக்கிறேன். அதற்க்கு காரணம் ரசிகர்கள் தான். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. உங்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ இதோ...