பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவு, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்தது. இவருடைய பழகிய நினைவுகள் குறித்து, தொடர்ந்து பல  மறைவு அவருடைய ரசிகர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து வந்தனர். 

குறிப்பாக, இளையராஜா குழந்தை போல் என்னை விட்டுட்டு போய்டியா பாலு, எங்க போன? என பேசியது மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. மேடை கச்சேரி செய்த காலங்களில் இருந்தே, இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள். இதனால் இவருடைய இழப்பை இளையராஜாவால ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் கடைசியாக இளையராஜாவுக்கு முத்தமிட்ட தகவல் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  எஸ்பிபி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவருடைய மகன் சரண், எஸ்பிபி நலம் பெற வேண்டி பிரபலங்கள் வீடியோ மூலம் வாழ்த்து கூறிய அனைத்தையும் டாப் மூலம் காட்டுவாராம்.

அப்போது எஸ்பிபி அவர்கள் தனது மகனை அருகில் அழைத்து இளையராஜாவின் ’பாலு எழுந்து வா’ என்ற வீடியோவை போட்டு காண்பிக்கும்படி கூறியதாகவும், அந்த வீடியோ ஓடிக்கொண்டிருந்தபோது, இளையராஜாவுக்கு எஸ்பிபி முத்தமிட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இந்த நண்பர்களின் பாசம் மனதை உருக்கும் விதத்தில் உள்ளது.