Asianet News TamilAsianet News Tamil

“எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து திங்கள்கிழமை நல்ல செய்தி”... ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய எஸ்.பி.பி.சரண்...!

அதன்படி தினமும் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கும் எஸ்.பி.பி.சரண், அவருடைய அப்பாவின் உடல் நிலை குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 
 

SPB Health condition Son SPB Charan Said hope good news on coming monday
Author
Chennai, First Published Sep 3, 2020, 5:23 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

SPB Health condition Son SPB Charan Said hope good news on coming monday

அதன் பலனாக கடந்த சில நாட்களாகவே எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து நல்ல தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராகி வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது. தற்போது மயக்க நிலையில் இருந்து முழுமையாக மீண்டுள்ள எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

SPB Health condition Son SPB Charan Said hope good news on coming monday

எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் பல்வேறு வதந்திகள் தீயாய் பரவின. இதனால் கவலையடைந்த எஸ்.பி.பி.சரண், அப்பாவின் உடல் நிலை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், நானே தினமும் அவருடயை உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை தருகிறேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி தினமும் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கும் எஸ்.பி.பி.சரண், அவருடைய அப்பாவின் உடல் நிலை குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

SPB Health condition Son SPB Charan Said hope good news on coming monday

 

இதையும் படிங்க: ஜனவரியில் மூன்றாவது குழந்தை... நடிகர் தனுஷ் வீட்டில் விரைவில் விசேஷம்...!

இந்நிலையில் இன்று எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், தொடர்ந்து 4வது நாளாக அப்பாவின் உடல் நிலை சீராக உள்ளது. கடவுளின் கருணை, உங்களுடைய பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களால் இந்த வார இறுதியில் நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோம். கண்டிப்பாக அவரது உடல் நிலை குறித்து திங்கள் கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார். இந்த செய்தியால் திரையுலகினரும், ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதோ அந்த வீடியோ... 

Follow Us:
Download App:
  • android
  • ios