Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பி.பி குரலுக்காகஒரு மாதம் காத்திருந்தார் எம்.ஜி.ஆர்! இது தெரியுமா உங்களுக்கு..?

நடிப்பு, பாடல், என இரு பரிமாணங்களிலும் ரசிககர்களை மகிழ்வித்த இன்னிசை பாடகர் எஸ்.பி.பி மறைவு, உலகெங்கிலும் உள்ள இவருடைய ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவர் எம்.ஜி.ஆருக்கு பாடியுள்ள பாடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
 
spb first tamil singing sonfor mgr in adimaipen movie
Author
Chennai, First Published Sep 25, 2020, 3:57 PM IST

நடிப்பு, பாடல், என இரு பரிமாணங்களிலும் ரசிககர்களை மகிழ்வித்த இன்னிசை பாடகர் எஸ்.பி.பி மறைவு, உலகெங்கிலும் உள்ள இவருடைய ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவர் எம்.ஜி.ஆருக்கு பாடியுள்ள பாடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய மேஜிக் குரலால், எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு இதுவரை 16 மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி. பி. பாலசுப்ரமணியம்.

spb first tamil singing sonfor mgr in adimaipen movie

1960களின் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்ரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக இருந்தவர். இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் ௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு என்கிற பாடலைத்தான். ௭திர்பாராத விதமாக ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. 

spb first tamil singing sonfor mgr in adimaipen movie

அடுத்ததாக 'சாந்தி நிலையம்' படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' திரைப்படத்தில்  இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்து இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கி தந்தது.

எஸ்.பி.பியை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தவர், எம்.எஸ்.வி தான். மேலும் இவருடைய குரலுக்காக எம்.ஜி.ஆர் கிட்ட தட்ட, ஒரு வாரம் வரை காத்திருந்தாராம். மேலும் இந்த பாடலுக்காக எஸ்.பி.பிக்கு ரூபாய் 150 சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios