காற்றில் கரைந்த கீதமாக, மீண்டும் உடல் நலம் தேறி எழுந்து வருவார் என நம்பி கொண்டிருந்த பல ரசிகர், மற்றும் பிரபலங்களின் எதிர்பார்ப்பை பொய்யாகி விட்டு... விண்ணுலகம் சென்ற எஸ்.பி.பி  ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக வழங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழியிகளில் அதிக பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகராக திகழ்ந்து வருகிறார்.  கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றவர்.

இவர் மறைவை தொடர்ந்து இவர் செய்துள்ள விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவர் தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமாக, நெல்லூரில் பரம்பரை வீடு திப்பராஜுவாரி, தெருவில் இருக்கிறது. சென்னையில் எஸ்.பி.பாலசும்ப்ரமணியம் பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி விட்டார். அவரது தாயார் அங்கு வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது தாயார் அங்கு மரணமடைந்தார். அங்கு தான் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.  அதன் பிறகு அவரது நெல்லூர் வீடு பல காலமாகப் பூட்டியிருந்தது. இதனை அறிந்து பலரும் அந்த வீட்டை வாங்க முயன்றாலும் எஸ்.பி.பி. இதை யாருக்கும் விற்கவில்லை.

இந்நிலையில் இந்த வீட்டைக் காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை ஒப்படைத்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே இந்த தானத்தைச் அவர் செய்ததாக கூறப்பட்டது. இந்த காலத்தில் இப்படி ஒரு மனசு யாருக்கு வரும் சார்...