இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் ஒன்று 'படையப்பா'. இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக மறைந்த நடிகை சௌந்தர்யா நடித்திருப்பார். மேலும், 'நீலாம்பரி' என்கிற மிரட்டல் வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படம் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைத்தது.

மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை லட்சுமி, சித்தாரா, ப்ரீத்தா, அபாஸ், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். 

100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த சௌந்தர்யாவிற்கு முன்பு நடிக்க இருந்தவர் நடிகை நக்மா தானாம். 

இவரை கமிட் செய்து, படப்பிடிப்பும் துவங்கப்பட்ட நிலையில் திடீர் என இந்த படத்தில் இருந்து விலகினார் நக்மா. இதனால் அவசர அவசரமாக படக்குழுவினர், இந்த படத்தில் சௌந்தர்யாவை கதாநாயகியாக நடிக்க வைத்தனர். 

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம், 20 வருடங்களை கடந்தும் ரசிகர்களின் பேவரட் படமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  படப்பிடிப்பில் ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிகுமாருடன் நக்மா அமர்ந்திருக்கும் புகைப்படம் இதோ...