நாளை திருமணம்! இன்று வாழ்க்கையில் உள்ள மூன்று முக்கியமான ஆண்கள் பற்றி மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 10, Feb 2019, 4:18 PM IST
soundharya rajinikanth tweet for three important person in our life
Highlights

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை போயஸ் தோட்டத்தில் உள்ள, ரஜினிகாந்தின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது.
 

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை போயஸ் தோட்டத்தில் உள்ள, ரஜினிகாந்தின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது.

அதற்கும் முன்னதாக தற்போது திருமண வரவேற்பு மற்றும் திருமணத்தின் முன்னேற்ப்பாடுகள், களைகட்டி வருகிறது.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், சமூக வலைத்தளத்தில் தன்னுடைய வாழ்வில் உள்ள மூன்று முக்கியமான ஆண்கள் பற்றி பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய டார்லிங் என குறிப்பிட்ட தந்தை ரஜினிகாந்த் என கூறியுள்ளார்.  தேவதை என கூறி தன்னுடைய மகன் வேத்தை கூறியுள்ளார். கடைசியாக என்னுடைய விசாகன் என கூறி மனதில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவர் மூவரும் என்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள்' என்று கூறியுள்ள செளந்தர்யா, மூவரின்  புகைப்படங்களியும் பதிவு செய்துள்ளார்.

செளந்தர்யா இந்த டுவீட் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. மேலும் நாளை முதல் புதிய வாழ்க்கையை தொடங்கவிருக்கும் செளந்தர்யாவுக்கு பலர் தங்களுடைய வாழ்த்து மழையில் அவரை நனைத்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

loader