சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகன் சௌந்தர்யா ரஜினிகாந்த், திடீர் என, தர்மபுரி ஆதீனத்தை சந்தித்து, ஆசி பெற்ற புகைப்படங்க தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், பெரியார் பற்றி சர்ச்சையான விதத்தில் பேசியதாக அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. நடிகை குஷ்பு, ராகவா லாரன்ஸ், போன்ற பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்த போதிலும், பெரியாரிஸ்ட்டை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என போராட்டம் வரை சென்றனர்.

ஆனால், ரஜினிகாந்த் நடக்காத விஷயத்தை சொல்லவில்லை என மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

அதே போல், ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட இரு வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்த போதும், வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தார் நீதிபதி.

இப்படி தலைவரை சுற்றி பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்க, திடீர் என ரஜினிகாந்தின் இரண்டாவது மகள், சௌந்தர்யா தர்மபுரி ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மேலும் மற்ற சில கோவில்களுக்கும் சென்று குடும்ப நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் அவர் வழிபாடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சில, வெளியாகி வைரலாகி வருகிறது.