soundhar raja acting assistant commissioner role
ஹீரோக்களுக்கு நண்பனாக ஆழமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் சௌந்தராஜா தற்போது "ஒரு கனவு போல" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார்.
"அபிமன்யு" என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார். இந்தப் படத்துக்கான சில காட்சிகளில் உடலை ஏற்றியும் இறக்கியும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் சௌந்தரராஜா. மேலும் இந்தப் படத்தின் மூலம் காக்கி உடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக ரசிகர்கள் மனதில் சௌந்தர ராஜா நிற்பார் என்கிறார்கள்.
இந்நிலையில் அபிமன்யு படத்தின் தயாரிப்பு முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் இப்படி முன்னோட்டக் காட்சிகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், காவல்துறை கதை என்பதால், ஒரு காவல்துறை அதிகாரி வெளியிட வேண்டும் என்று விரும்பினர் படக் குழுவினர். அவர்கள் ஆசைப்பட்ட படியே காவல்துறை உயர் அதிகாரி, அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் (Asra Garg IPS), அபிமன்யு படத்தின் தயாரிப்பு முன்னோட்டக் காட்சியை வெளியிட்டு படக் குழுவினரை பாராட்டினார். அஸ்ரா கார்க், பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்.
