ரஜினி மகள் சவுந்தர்யா தனது கணவருடன் விசாகனுடன், மகன் வேத் விளையாடும் போட்டோவை போட்டதும் சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்தின் சவுந்தர்யாவிற்கும், கோவை தொழிலதிபர் மகன் வணங்காமுடி மகன் விசாகனுக்கும் கடந்த மாதம் திருமணம் சென்னையில் கோலாகலமாக கல்யாணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான் ஆனால் முதல் கல்யாணத்தைப்போலவே அரசியல் பிரமுகர்கள், சினிமா ஸ்டார்கள் என சூப்பர் ஸ்டார் வீட்டு கல்யாணத்தில் களைகட்டியது.

சவுந்தர்யாவிற்கு முதல் திருமணம் மூலம் வேத் என்ற மகனின் போட்டோவும் திருமண சமயத்தில் வைரலானது.  முதல் நாள் ரிசப்ஷனில் சவுந்தர்யாவின் மருதாணி வைத்த கைகளை மகன் வேத் ஆர்வமாக பார்ப்பதும், மணமேடையில் சவுந்தர்யா மடியில் வேத் அமர்ந்திருப்பதும், ரஜினி வேத்துடன் விளையாடுவதும் என ஆச்சர்யத்தை உண்டாக்கும் போட்டோக்கள் வைரலானது. 

கல்யாணம் முடிந்து தேனிலவு சென்ற போதும், மகன் வேத்-ஐ நினைத்துக் கொண்டிருப்பதாக சவுந்தர்யா தனது ட்விட்டரில்   பதிவிட்டுருந்த நிலையில், இன்று புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் போட்டோவில் தனது கணவன் விசாகனும், மகன் வேத்தும் சந்தோஷமாக விளையாடுகின்றனர்.

இதனை சவுந்தர்யா, ‘இது தான் ஆசிர்வாதம்'  என ட்வீட் போட்டுள்ளார். என்னதான் இரண்டாவது கல்யாணம் தானே என பலர் கமெண்ட்ஸ் போட்டாலும் உண்மையாகவே  "இது தான் ஆசிர்வாதம்" யாருக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்துவிடும்? சௌந்தர்யாவின் இந்த போட்டோவை ரஜினி ரசிகர்கள்  ஸர் செய்து வருகின்றனர்.