நேற்று முன்தினம் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. நாளை காலை தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மூன்று ஆண்கள்  தன்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள் என்று சவுந்தர்யா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

முதலாவது இடத்திலிருப்பது அவரது தந்தை ரஜினிகாந்த். இரண்டாவது சவுந்தர்யாவின் மகன் வேத். மூன்றாவது நாளை கல்யாணம் செய்யவுள்ள விசாகன். மூன்று பேருடன் தான் இருக்கும் போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார். அதில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள தனது மகனுடனான போட்டோ பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

நாளை விசாகனுடன் திருமணம் செய்யவிருக்கும் நிலையில் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் மூன்று ஆண்கள் தன்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள் என்று பதிவிட்டிருக்கும் சவுந்தர்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மனதை நெகிழவைக்கும் இந்த பதிவின்  மூலம் தனது முதல் திருமண வாழ்க்கையில் எப்படிப்பட்ட கசப்பான அனுபவத்தை சந்தித்திருக்கிறார் எனத் தெரிகிறது. சவுந்தர்யாவின் இந்த பதிவிற்கு நெகட்டிவ் கமாண்ட்ஸ் போட்டிருந்தாலும், அதிகமாக வாழ்த்தியே பதிவிட்டு வருகின்றனர். எப்போதுமே பிரபலங்கள் ஏதாவது பதிவிட்டால் கலாய்த்து மீம்ஸ் போட்டு பதிவிடும் நெட்டிசன்களே, மறுமணமே தைரியமா, கெத்தா, சந்தோஷமா தான் அமைஞ்சது, உங்களுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் என சவுந்தர்யாவின் இந்த தைரியத்தை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.