சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகரும், தொழிலதிபருமான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இயக்குநரான சவுந்தர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தில் தனது தல பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்பா ரஜினிகாந்த், அம்மா லதா, கணவர் விசாகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

வெள்ளை நிற பட்டு வேட்டி, சட்டையில் லேசான தாடியுடன் மகள் அருகே நின்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேபோல மற்றொரு பதிவில் விசாகனின் அம்மா, அப்பாவுடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படத்தையும் சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.