திரையுலகை பொறுத்தவரை பலர் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்தவர்கள் தான். தற்போது அனைவராலும் அறிந்துக் கொள்ளப்பட்ட நடிகர்கள் பலர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்புக் கிடைக்காமல் நடு ரோட்டில் கூட படுத்து தூங்கியுள்ளனர். 

இப்படி மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்தவர்கள் தான் நடிகர் விஜய் சேதுபதி, யோகி பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள்.

இவர்களை போலவே பல்வேறு இன்னல்களை தாண்டி, முன்னணி காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சூரி. சமீபத்தில் இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த சுவாரிஸ்யமான தகவல் தெரிவித்துள்ளார்.

சூரி சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டார். இதில் தொகுப்பாளராக இருந்தவர் டிடி. எப்போதும் மிகவும் சவரிஸ்யமான கேள்விகளை கேட்டு அசத்தும் இவர், சூரியிடம் உங்களுக்கு வேஷ்டி கதை இருக்காமே அதை சொல்லுங்கள் என கூறியுள்ளார்.

இது குறித்து பேச துவங்கிய சூரி... தான் சசினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது சூரிக்கு அவரது நண்பர் வெற்றி என்பவர் தான் தனக்கு மிகவும் உதவியாக இருந்து வந்ததாகவும். அவர் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த போது அவருக்கு தங்க வீடு, மற்றும் அனைத்து உதவிகளையும் செய்தார் என்றும் கூறியுள்ளார். 

அப்போது சூரி வேட்டி கதை ஒன்றையும் கூறினார். சூரிகும் இவருடைய நண்பர் வெற்றிக்கும் இயக்குனர் பாலு மகேந்திராவின் சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம்.

அந்த சீரியலில் நடிப்பதற்காக  வேட்டி அணிந்து வர வேண்டும் என்று கூரியிருந்தார்களாம், ஆனால் துரதஷ்ட வசம் இவர்கள் இருவரிடத்திலும் வேஷ்டி இல்லை. புதிதாக வாங்கவும் காசு இல்லையாம். 

இதனால் இவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வேஷ்டி கட்டிக்கொண்டு வெளியில் படுத்திருந்தாராம். உடனே சூரியும் அவரது நண்பரும் லாவகமாக அவருக்கே தெரியாமல் அவர் கட்டி இருந்த வேட்டியை திருடிக்கொண்டு பாலு மகேந்திராவின் படப்பிடிப்பிற்க்கு சென்றுள்ளனர். 

ஆனால் அங்கே இருவருக்குமே வேட்டி தேவைப்பட்டதாம். இதனால் திருடிவந்த வேட்டியை கிழித்து ஆளுக்கு பாதி வேட்டியாக கட்டிக்கொண்டார்களாம். இதனால் அவர்கள் கட்டி இருந்த வெட்டி கோவணம் போன்று காட்சியளித்ததால் அவர்களை ஷூட்டிங்கில் சேர்க்கவில்லையாம்.  

இதனை வெளியே கூறியதும் அரங்கத்தில் கூடி இருந்த அனைவரும் அரங்கமே அதிரும் படி சிரித்துள்ளனர்.