நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக, 'NGK ' திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் கே. வி .ஆனந்த் இயக்கத்தில்,  சூர்யா 'காப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷான் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.  இதைத் தொடர்ந்து தற்போது சுதாகொங்கரா இயக்கி வரும் 'சூரரை போற்று' படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் சூர்யா.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மேலும் ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.  இந்த படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.  அதாவது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் ஓப்பனிங் பாடலை, ஏகாதேசி என்பவர் எழுதி உள்ளதாகவும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் பாடி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.